Map Graph

நேரு உயிரியல் பூங்கா, ஐதராபாத்

நேரு உயிரியல் பூங்கா என்றழைக்கப்படும் ஐதராபாத் மிருகக்காட்சிசாலை இந்தியாவில் ஐதராபாத் நகரில் மீர் ஆலம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய உயிரியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. 1.2 சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 1500 வகையான உயிர்வாழ்வன பராமரிக்கப்படுகின்றன. இவைகளில் 340 பறவை இனங்களும் அதிக எண்ணிக்கையில் ஊர்வனவும் அடங்கும். பெரும்பாலான உயிரினங்கள் இயற்கைச் சூழலில் உள்ளன. சென்றுவர பேருந்துகள் உள்ளன. ஒரு அருங்காட்சியகமும் மீன்காட்சிச் சாலையும் சிறுவர் இரயிலும் உண்டு.

Read article
படிமம்:Hyderabad_zoo.jpgபடிமம்:BlackHeadedIbis_HyderabadZoo.jpgபடிமம்:PaintedStorks_1_HyderabadZoo.JPGபடிமம்:PaintedStorks_2_HyderabadZoo.JPGபடிமம்:SacredBabboon_HyderabadZoo.jpg